உடலை வெல்வதே, உயிரின் பயணம்.
கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம்.
ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம்.
கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம்.
ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
மகளை இழந்தது உடல் வழி மாயை தவழும் நிலா அவள்.
சகாப்தமே படைத்தவள். கவிழும் நிழல் வந்தால்,
காட்சி கடவுள் இல்லை ஆட்சி அரன்வழி,
நின்றால் அன்பே சிவமாகும்.
வம்பு செய்யும் உலகில், வாழ்க்கை தான் எங்கே?
கலைந்தது வேடம் காட்சியில் கடவுளே வந்தார்
அலையும் மனம், அன்பே சிவமாவதில்லை.
வம்புதான், வளர்க்கும் வாழ்க்கை நாடகம்
அன்பிலே சிறந்தால், அனைத்தும் நலமே.
ஊன் வாழும் வாழ்க்கையில், கானலே மிஞ்சும்.
தேன் கூடும் தமிழ் வந்தால், தெய்வமே ஆகலாம்.
பொய்யிலே வாழ்ந்தால், புலராது வானம்.
மெய்யறிவுதனைக் காண, மிளிருமே சோதி!
அன்பில் தடம் அறிய அனைத்தும் நலமாகும்.
வினைத் துயர் போக, வேதமே வழி.
சாதனை வேண்டில் சத்தியம் தனித்தே இருக்கும்.
உத்தம புருஷனாய் இருக்க, உணர்வது ஞானம் ஒன்றே!
போரிட நினைக்கும் புறம்போக்கு மனங்கள்.
சேரும் இடம் தெய்வமென்றால்,
கூறுபட்டு வாழ்தல் கொடிய வினையேயாகும் சேறு குளித்து,
எழும் மனம், தெய்வமாவதில்லை.
நீறணிந்த வழியில் தான் நிறையொளி இருப்பே வரும்.
மார்புதட்டிப் பேசியே மண் கவ்வும் உலகம்.
சேரும் இடம் தெய்வமென்றால் தெளிவது, வானமே,
உளி கொண்டு, செதுக்க உயிரும் ஒளிரும் துயர் கொண்டு மடிந்தால்,
துலங்குவது வானமல்ல, ஈனமுற்று சாகவே, இறக்கும் மனம் இங்கு.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.